பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி
பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த திமுக பிரமுகரிடம் இருந்து பணத்தை மீட்டு தர கோரி பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு
By : King 24x7 Angel
Update: 2024-02-09 06:47 GMT
பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த திமுக பிரமுகரிடம் இருந்து பணத்தை மீட்டு தர கோரி பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் மனைவி ரமீலா வயது 32 மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் மனைவி ராஜகுமாரி, ஆகிய இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து ரமீலா தெரிவிக்கையில், தற்காலிகமாக வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தட்டச்சு பணி மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு செய்திடும் அலுவலகத்தில் வேலை செய்து வந்ததாகவும் அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினர் ராமக்கண்ணு மகன் பச்சமுத்து வயது 59 என்பவர் வி.ஆர்.எஸ். எஸ் புரத்தில் (VRSS புரம்) உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி வருகிறார், பிரம்மதேசம் திமுக கிளை செயலாளரான இவர் , ஆளும் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் சொல்லி, ரமீலா ஆகிய தனக்கு கிராம நிர்வாக உதவியாளர் பணியும் மற்றும் ராஜகுமாரிக்கு நியாய விலை கடையில் விற்பனையாளர் பதவியும் கட்டாயம் வாங்கி தருவதாகவும், அதற்காக கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நாலு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் பேசி முடித்து, முன்பணமாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து, வேலை கிடைத்த பிறகு ஒரு லட்சம் தந்து விட வேண்டும் என்றும், ராஜகுமாரிக்கு நியாய விலைகடை விற்பனையாளர் பணிக்கு 5 லட்சம் பேசி முடிந்து முன்பணமாக நான்கு லட்சம் கொடுத்தும், வேலை கிடைத்த பிறகு ஒரு லட்சமும் தந்து விடுவதாகவும், தங்களது தகப்பனார்கள் முன்னிலையில் உறுதியளித்து, கடந்த 27.10.2022-ம் தேதி பிரம்ம தேசத்தில் உள்ள அவரது வீட்டில் பணத்தைப் பெற்றுக் கொண்டார், ஆனால் அவர் கூறியபடி 2023 மார்ச் மாதத்தில் எங்களுக்கு எந்த வித அரசு வேலையும் வாங்கித் தரவில்லை, அதன் பிறகு கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை நாங்கள் பலமுறை கேட்டும் பணம் தராததால், அறியாமையால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாங்கள் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், புகார் மனு அளித்திருப்பதாகவும், இதனால் மிகுந்த சிரமம் அடைந்து மன உளைச்சல் அடைந்து வருவதாகவும், எங்களது பணத்தை மீட்டு தரநடவடிக்கை எடுக்க வேண்டும் எனதெரிவித்துள்ளனர். மேலும் பணம் கொடுத்ததற்கான வீடியோ ஆதாரம் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மனு வழங்கும் போது இவர்களது தந்தை மற்றும் கணவர் உடன் இருந்தனர்.