இணைய வழி சேவை ப்ராஜெக்ட் பெற்று தருவதாக ரூ.45 லட்சம் மோசடி - இருவர் கைது

திருப்பூரில் மத்திய மாநில அரசுகளின் கணினி மயமாக்கும் மற்றும் இணையவழி சேவை ப்ராஜெக்ட் பெற்றுத் தருவதாகவும், அரசு கட்டுமான வேலைகள் பெற்றுத் தருவதாகவும் கூறி ரூ.45,83,270 பெற்று மோசடி செய்து ஏமாற்றிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-30 05:26 GMT

 திருப்பூர் ராம்நகரை சேர்ந்த முத்துசாமி என்பவர் கம்யூட்டர் தொழில்நுட்பம் மூலமாக கணினி மென்பொருள் உருவாகக்கும் தொழில் செய்துவருகிறார். அவரிடம் சென்னையை சேர்ந்த ரவிபாபு மற்றும் திருச்சியை சேர்ந்த துரைக்கண்ணன், ஆகியோர் மாநில அரசுகளின் கணினிமயமாக்கும் திட்டத்தின் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை கணினி மயமாக்கும் திட்டத்தை பெற்றுத்தருவதாக கூறியும்,  மத்திய அரசின் NTPC ltd (National Thermal Power Corporation Ltd)  நிறுவனத்தின் ரூ 9,51,54,711 க்கான கட்டுமான திட்டப்பணிகள் உள்ளதாக கூறி அதனை பெற்றுத்தருவதாக கூறி பணம் ரூ 45,83,270/- ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக நடவடிக்கை வேண்டி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களிடத்தில் அளித்த புகார் மனுவின் பேரில் உத்தரவின்படி திருப்பூர் மாநகரம் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுவிசாரணைமேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை பிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர், பிரவீன் குமார் அபிநபு உத்காதரவுபடி துணை ஆணையர் (தெற்கு), திருப்பூர் மாநகரம்மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு, காவல் உதவி ஆணையர் வேலுசாமி, மற்றும் காவல் ஆய்வாளர் பிச்சையா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படையினர்  சென்னை, மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் மார்க்கெட், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த ரவிபாபு (வயது 46)  என்பவரையும், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா , கோவில்பட்டி தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணு என்பவரையும் கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News