அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி!

புலியகுளம் பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி நடந்துள்ளது.

Update: 2024-01-22 09:58 GMT


பைல் படம்


கோவை:புலியகுளம் பகுதியை சேர்ந்த பூபதி(36) என்பவரிடம் வடவள்ளி சுண்டப்பாளையம் பகுதியை சேர்ந்த அன்புசிவா என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 6,60,000 ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வரும் அன்புசிவா கோவை புலியகுளம் சேர்ந்த பூபதியிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன் என அன்புசிவா கூறியதை நம்பி பூபதி இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் 4,65,000 ஆயிரம் ரூபாயை தமிழ்வாசன் என்பவருக்கு வங்கி கணக்கில் அனுப்பியுள்ளார்.பணம் கொடுத்து வெகு நாட்களான நிலையில் வேலை வாங்கித் தராமல் அன்புசிவா இழுத்தடித்ததால் சந்தேகமடைந்த பூபதி பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். இதனையடுத்து 55 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் பூபதிக்கு அன்பு சிவா அளித்துள்ளார்.மீதி பணத்தைக் கேட்டு பூபதி தன் குடும்பத்தினருடன் அன்பு சிவாவின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்ட நிலையில் தன்மீது மன்னனையை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி மிரட்டி உள்ளார்.இதனையடுத்து பூபதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அன்பு சிவா மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி இருவரையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News