அன்னை லைப் டிரஸ்ட் சார்பில்இலவச ஆம்புலன்சு சேவை

சேலம் அன்னதானபட்டி அன்னை லைப் டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்சு சேவையை போலீஸ் துணை கமிஷனர் என்.மதிவாணன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-02 07:00 GMT

ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் 

சேலம் அன்னதானப்பட்டி அன்னை லைப் டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை தொடக்க நிகழ்ச்சியில் சேலம் போலீஸ் துணை கமிஷனர் என்.மதிவாணன் கலந்து கொண்டு நிர்வாக இயக்குனர் சரண்யாவிடம் ஆம்புலன்சு சாவியை கொடுத்து சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டிரஸ்ட் நிறுவனர் வாசுதேவன், நிர்வாக இயக்குனர் சரண்யா, நிர்வாகிகள் விஜயலட்சுமி, ராகுல், பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆம்புலன்சு சேவை குறித்து டிரஸ்ட் நிறுவனர் வாசுதேவன் கூறுகையில், இன்றைய அவசர யுகத்தில் துரித சேவை கட்டாயம் தேவை என்பதை உணர்ந்து ஆம்புலன்சு சேவை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதற்காக நன்ெகாடையாளர்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக நிதி உதவி பெற்று வந்தோம். தற்போது ஆம்புலன்சு ஒன்று வாங்கி உள்ளோம். இதன்மூலம் 24 மணி நேரமும் விபத்து, நோய் பாதிப்பு, பிரசவம் உள்ளிட்ட எந்தவொரு அவசர தேவையாக இருந்தாலும் எங்களது டிரஸ்டை அணுகலாம். நாங்கள் சேவை செய்ய தயாராக இருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் உணவுக்காக அலைந்து திரிந்த சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு உணவு கொடுக்க தொடங்கினோம். இன்று 1,335 நாட்களை கடந்தும் அந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறோம் என்றார்.
Tags:    

Similar News