திருவண்ணாமலை : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் 904 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை செய்யாறு எம்எல்ஏ ஓ.ஜோதி வழங்கினார்.;

Update: 2024-01-06 07:12 GMT

விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023-2024 ஆம் ஆண்டு +1 பயிலும் 904 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் விழா வெம்பாக்கம்,அழிவிடைதாங்கி,வட இலுப்பை, பிரம்ம தேசம்,இராந்தம், வடமணப்பாக்கம், பெருங்கட்டூர் உள்ளிட்ட 9 பள்ளிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் என சிறப்புரை ஆற்றினார்.

Advertisement

உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜூ ,வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் J C K.சீனிவாசன், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் N.சங்கர், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் M.தினகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள்தேவி செந்தில்குமார், சீனிவாசன், சரவணன் , புவனேஸ்வரன் பிடிஏ தலைவர்கள் கனகசபை, மோகன் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி, சிவப்பிரகாசம் பெற்றோர் ஆசிரியர் தலைவர் பிரகாஷ் ,குமார் மற்றும், அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News