பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
குமாரபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவும் சுகாதார கழிப்பிடம் பூமி பூஜையும் நடந்தது.
By : King 24x7 Website
Update: 2024-01-09 09:42 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் விழாவை துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் பங்கேற்று, 216 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: தமிழக அரசு சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி பயில தேவையான பெரும்பாலான உதவிகளும் வழங்கப்படுகிறது. மாணாக்கர்கள் நீங்கள் செய்ய வேண்டியது, நன்கு படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும். பெற்றோரை மதித்து வாழ்வில் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். என்.சி.சி. அலுவலர் அந்தோணி சாமி, நகர மன்ற உறுப்பினர்கள், பி.டி.ஏ. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து நாராயண நகர் பகுதியில் 24.96 லட்சம் மதிப்பில் பொது சுகாதார கழிப்பிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர்.