பேச்சிப்பாறையில் மாணவ மாணவிகளுக்கு  கட்டணமில்லா படகு சேவை

பேச்சிப்பாறையில் மாணவர்களுக்கு கட்டணமில்லா படகு சேவையை கலெக்டர் துவக்கி வைத்தார்.

Update: 2024-02-22 08:11 GMT

பேச்சிப்பாறையில் மாணவர்களுக்கு கட்டணமில்லா படகு சேவையை கலெக்டர் துவக்கி வைத்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதியில்  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (22.02.2024) காலை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர்,  பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.               இதில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட காணி இன பழங்குடியின மாணவ மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் காணி பழங்குடியின பள்ளி மாணவ மாணவியர்களின் போக்குவரத்திற்கு ரூ.3 இலட்சம் மதிப்பில் கட்டணமில்லா படகு சேவையை கலெக்டர்  துவங்கி வைத்தார்.        

இந்த படகு சேவையின் வாயிலாக பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமங்களான  முடவன்பட்டி, தச்சமலை, களப்பாறை, நடனபொத்தை, புன்னமுட்டுதேரி, மாறமலை, தோட்டமலை, எட்டாம் குன்று மலை, வளையம்ஏற்றுமலை ஆகிய பகுதிகளில் உள்ள காணி பழங்குடின மக்கள் பயனடைவார்கள் என கலெக்டர் தெரிவித்தார்.      நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தபாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கனகராஜ், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News