கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகங்கள்
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-10 17:50 GMT
இலவச புத்தகம்
கும்பகோணம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகை தந்துள்ள மாணவிகளுக்கும், புதிதாக வருகை தந்துள்ள மாணவிகளுக்கும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து, விலையில்லா புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், பள்ளி தாளாளர் தீபக் ரமேஷ், தலைமை ஆசிரியர் லதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.