விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ
அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.;
Update: 2024-02-09 15:13 GMT
இலவச மிதிவண்டி
அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரில் உள்ள அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைபள்ளியில் முப்பெரும் விழா இன்று நடைப்பெற்றது. இதில் அப்பள்ளியின் ஆண்டுவிழா, இலக்கிமன்ற, விளையாட்டு விழா மற்றும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
இதில் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.