போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.;

Update: 2024-05-29 15:49 GMT

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.


விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 90 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி- I (குரூப் 1) தேர்வு வரும் 13.07.2024 அன்று நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்இசூலக்கரையில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்று நர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது.

Advertisement

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News