புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கல்

புதுக்கோட்டையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.;

Update: 2024-01-12 16:11 GMT

நோட்டு புத்தகம் வழங்கல்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜகோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 250 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை இலவசமாக வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர்மான உதயநிதி ஸ்டாலின்46வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவில் உள்ள பல்வேறு அமைப்பின் சார்பில் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக தொண்டர் அணி சார்பில் தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் புதுக்கோட்டை ராஜகபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் படிக்கும் 250 மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மஞ்சப்பை உள்ளிட்டவைகளை புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே கே செல்ல பாண்டியன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News