என்இசிசி மூலம் இலவச முட்டை வண்டி வழங்கும் விழா

மோகனூரில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்இசிசி) சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-04-07 04:23 GMT

இலவச முட்டை வண்டி

மோகனூரில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்இசிசி) சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கும் விழா நடைபெற்றது. என்இசிசி மூலம் முட்டை விற்பனையை அதிகரிக்கும் வகையில், பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக முட்டை வண்டிகள் (egg cart) வழங்கப்பட்டு வருகிறது. தற்போது என்இசிசி தேசிய தலைவர் அனுராதா தேசாய் மூலம் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதல் பயனாளிகளுக்கு முட்டை வண்டிகள் வழங்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் முட்டை வண்டி விநியோகத் திட்டத்தின் கீழ் நான்காவது முட்டை வண்டி வழங்கும் விழா, நாமக்கல் மாவட்டம் மோகனூர் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ், விழாவில் கலந்துகொண்டு, புதிய முட்டை வண்டியை பயனாளி தர்மன் என்பவருக்கு வழங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கலப்படம் செய்ய முடியாத முட்டையை அதிகம் விரும்பி சாப்பிடுவதால், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தற்போது இந்தியாவில் மிக குறைவாக உள்ளது. என்இசிசி மூலம் முட்டை வண்டிகளை, பயனாளர்களுக்கு வழங்குவதன் மூலம் முட்டையின் நுகர்வு அதிகரிப்பதோடு, பயனாளிகளின் வாழ்வாதாரமும் உயர்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 30 ஆண்டுகளாக சத்துணவு உணவுத் திட்டத்தில் முட்டை வழங்கப்பட்டு வருவதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் பெரும்பாலும் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது என கூறினார்.

என்இசிசி மண்டல உறுப்பினர் சுப்ரமணியம், மோகனூர் வட்டார தலைவர் ராஜேந்திரன், என்இசிசி உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட திரளான கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News