தனியார் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
தனியார் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
Update: 2024-03-20 05:27 GMT
கண் சிகிச்சை முகாம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் காருண்யா குணாவதி தலைமை வகித்தார். கற்பகராஜ் வரவேற்புரை ஆற்றினார். முத்து செல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வணிக வைசிய சங்க தலைவர் சங்கர், துணைத் தலைவர் சக்தி, செயலாளர் மாரியப்பன், சங்கரன்கோவில் மின் பொறியாளர் சங்கர சுப்பிரமணியன், ராமசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர். முடிவில் காளிராஜ் நன்றி கூறினார்.