இலவச கண் பரிசோதனை முகாம்
தென்காசியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது;
Update: 2024-05-07 02:13 GMT
இலவச கண் பரிசோதனை முகாம்
தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை கடையம் அப்பல்லோ பார்மசி, ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முகம்மது நெய்னார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து தங்களது கண்களை பரிசோதனை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.