இலவச கண் அறுவை சிகிச்சை மற்றும் கண்ணாடி வழங்கும் விழா
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்த நாளை முன்னிட்டு 1100 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை மற்றும் கண்ணாடி வழங்கும் விழா.;
Update: 2024-03-10 18:09 GMT
கண் அறுவை சிகிச்சை முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் 84- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ராணிப்பேட்டை,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பயனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டு 1139 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைசெய்யப்பட்டு லென்ஸ் பொருத்தப்பட்டு சிகிச்சை தாங்கும் விடுதி உணவு என அனைத்தும் சித்தர் பீடம் சார்பில் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில்,லட்சுமி பங்காரு அடிகளார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ், ஆன்மீக இயக்க துணை தலைவர் கோ.ப. அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கினார்கள். இதுவரை கடந்த 20 ஆண்டுகளாக கண் இலவச அறுவை சிகிச்சை அடிகளார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகின்றன.. இதுவரை சுமார் 20,000 பயனாளிகள் பயன் பெற்றுள்ளதாகவும் மேலும் இந்த இலவச கண் சிகிச்சை தொடர்ந்து நடைபெறும் எனவும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரமேஷ் தெரிவித்தார்..