இலவச கண் சிகிச்சை முகாம்

விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2023-12-19 07:20 GMT

விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் ரோட்டரி சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. இதற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் கன்யா ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் ஹேமந்த்ராஜ், பூபேந்திரா ஆகியோரை கொண்ட குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

இம்முகாமில் முன்னாள் துணை ஆளுநர்கள் சரவணக்குமார், சதீஷ், காங்கேயன், முன்னாள் துணை தலைவர்கள் கந்தன், சுந்தர் ஸ்கேல்ஸ் பாலகுருநாதன், காசிவிஸ்வநாதன், நம்மாழ்வார், முன்னாள் செயலாளர்கள் சரவணகிருஷ்ணன், சுகுமாறன், ஸ்ரீதர், நிர்வாகிகள் வினோத், குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 307 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News