இலவச கண் சிகிச்சை முகாம்

தென்காசியில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமானோர் பயன்பெற்றனர்.

Update: 2024-04-29 02:40 GMT
தென்காசியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி மாலிக் நகரில் நகர திமுக நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் சாந்தி மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாலிக் நகர் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News