இலவச கண் சிகிச்சை முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணத்தில் ஹயக்ரீவர் வித்யாஸ்ரமம் பள்ளி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது .;
Update: 2024-05-27 11:53 GMT
இலவச கண் சிகிச்சை முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் ஹயக்ரீவர் வித்யாஷ்ரம் பள்ளி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ஹயக்ரீவர் வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக இயக்குனர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். முகாமில் கண் சிவத்தல், கண் அரிப்பு, தூரப் பார்வை, கண்ணில் நீர் வடிதல், கண் புரை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில் அரக்கோணம் டவுன், கீழ்குப்பம், இச்சிபுத்தூர், தணிகை போளூர், வளர்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.