இலவச கண் சிகிச்சை முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துப்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
Update: 2024-06-03 05:31 GMT
கண் சிகிச்சை முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துப்பட்டியில் நற்சாந்துப்பட்டி சமூக நல அறக்கட்டளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் நற்சாந்துபட்டியைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் கலந்து கொண்டோருக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு கண்டறியப்பட்டு அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.முகாமுக்கு அறக்கட்டளையின், முதன்மைச் செயல் அலுவலர் டத்தோ லெ. மெய்யப்பன் தலைமை வகித்தார்.
முகாம் தலைவர் அ. முத்துராமன் வரவேற்றார். அறக்கட்டளையின் தலைவர் கும.பெரி. சாத்தப்பன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேரா. சி. முத்துக்குமார் செய்தார்.