உறையூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.;

Update: 2024-01-08 09:09 GMT

கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றவர்கள்

திருச்சி வினோத் கண் மருத்துவமனை மற்றும் நகர நிர்வாக துறை இணைந்து திருச்சி உறையூர் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த கண் சிகிச்சை முகாமிற்கு பத்தாது வார்டு கவுன்சிலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.

அருகில் கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சிகிச்சை முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

Tags:    

Similar News