இலவச கால்பந்து பயிற்சி முகாம்: மே 1 ஆம் தேதி துவங்குகிறது

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இலவச கால்பந்து பயிற்சி முகாம் மே 01 ஆம் தேதி துவங்குகிறது.;

Update: 2024-04-25 14:55 GMT

கால்பந்து பயிற்சி முகாம்

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இலவச கால்பந்து பயிற்சி முகாம் வருகிற 01.05.2024 முதல் 10.05.2024 வரை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி கால்பந்து மைதானத்தில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கால்பந்து பயிற்சி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் தனபால் மற்றும் சுர்ஜித் ஆகியோரிடம் தங்களது பெயர்களை 29.04.2024 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து மேலும் அறிந்து கொள்ள நசரேன், ஜான் ஆகியோரை 6383884501 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News