ரத்தினகிரியில் இலவச முழு உடல் பரிசோதனை முகாம்
ரத்தினகிரியில் இலவச முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்னை அப்பல்லோ மருத்துமனையுடன் இணைந்து கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டத்தின்கீழ் வேலூர் மண்டலத்தில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கோவில் பணியாளர்கள் 2,052 பேருக்கு மூன்று கட்டங்களாக இலவச முழு உடல் பரிசோதனை முகாம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது.
முகாமை பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்து சமய மண்டல இணை ஆணையர் விஜயா, துணை ஆணையர் சி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்பல்லோ மருத்துமனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இதில் கோவில் செயல் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது.