செஞ்சியில் 765 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
செஞ்சியில் கடந்த 40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு வந்த எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்கள் உட்பட்ட 765 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
Update: 2024-01-30 02:17 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ் தான் வரவேற்றார். சப்-கலெக்டர் திவ்யான்ஷி நிகம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு வந்த மக்களுக்கும் மற்றும் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மொத்தம் 765 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா க்களை வழங்கினார். தொடர்ந்து 36 பேருக்கு இலவச தையல் எந்திரங்களையும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றியகுழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி உள்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் செஞ்சி தாசில்தார் ஏழுமலை நன்றி கூறினார்.