இலவச மருத்துவ முகாம்
வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் நடந்த இலவச பொது மருத்துவமுகாமில் 520 நபர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.;
Update: 2024-01-28 11:13 GMT
இலவச மருத்துவ முகாம்
வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் லட்சுமி பாபு, பூபாலன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சீனுவாசன் வரவேற்றார். இதில் மருத்துவர் நீலமேகம் தலைமையில் மகேந்திரவர்மன், வசீகரன், லட்சுமிகாந்த், கலைமதி ஆகியோர் கொண்ட குழு வினர் 520 நபர்களை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். மேலும் கண் அறுவை சிகிச்சைக்காக 12 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.