கரூரில் இலவச மருத்துவ முகாம்

கரூரில் நாதன் மருத்துவமனை நலம் மெடிக்கல் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2024-03-17 10:36 GMT

மருத்துவ முகாம்

கரூர் அண்ணா வளைவு அருகே செயல்படும் நாதன் மருத்துவமனை கரூரை அடுத்த உப்பிடமங்கலம் பகுதியில் செயல்படும் நலம் மெடிக்கல் நிறுவனமும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் & ரத்ததான முகாம், உப்பிடமங்கலம் பேருந்து நிறுத்தம், தெற்கு கேட் அருகே உள்ள நலம் மெடிக்கல் நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவர்கள் லோகநாதன் மற்றும் விமல்நாதன் பொதுமக்களை பரிசோதித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

Advertisement

இன்று நடைபெற்ற முகாமில் ரத்த கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, கை, கால், மூட்டு, எலும்பு சம்பந்தப்பட்ட வலி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பரிசோதனை, நாள் பட்ட சளி, இருமல், காய்ச்சல்,ஆறாத புண் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு பரிசோதனை, நுரையீரல் மற்றும் மூச்சு குழல் சிகிச்சை, குடல் இறக்கம், குடல் புண் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.

மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கும் இன்சுலின் தேவைப்பட்டால் இன்சுலின் ஊசி போட பயன்படுத்தப்படும் ரூ. 1500 மதிப்புள்ள இன்சுலின் பேனா முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று சென்றனர்.

Tags:    

Similar News