செவன்த் டே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி சோழ ரோட்டரி சங்கம் சார்பில் திருச்சி பீமநகர் செவன்த் டே மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்.;
Update: 2024-02-19 10:00 GMT
இலவச மருத்துவ முகாம்
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி சோழ ரோட்டரி சங்கம் சார்பில் திருச்சி பீமநகர் செவன்த் டே மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை திருச்சி சோலா ரோட்டரி சங்கத்தின் செயலாளர் அமலச்சந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார் அருகில் சங்கத் தலைவர் முருகன் முன்னாள் தலைவர் பாலச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த மருத்துவ முகாமில் இதயம் கல்லீரல் மற்றும் சிறுநீரக பரிசோதனை நடைபெற்றது மேலும் திமுகவில் ரூபாய் 7500 மதிப்புள்ள இசிஜி எக்கோ usg ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த இலவச பரிசோதனை முகாமில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மருத்துவர்கள் கணேசன் பிரகாஷ் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் பீம நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.