பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

நாலுமாவடி புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.

Update: 2024-02-19 08:43 GMT

மருத்துவ முகாம் 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை சேவை மனப்பான்மையுடன் குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவத்தை வழங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சிறப்பு  மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனையில்  24 மணி நேர மகளிர் மற்றும் மகப்பேறு நோய் சிறப்பு மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிறப்பு சிகிச்சைபிரிவு, நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, உடலியக்க மருத்துவ பிரிவு, ஐ.சி.யூ. வசதி உள்ள ஆம்புலன்ஸ் வசதி, 24 மணி நேர மருந்தகம் வழங்கும் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. எக்கோ கார்டியோகிராம், இசிஜி, எக்ஸ்ரே, அனைத்து வசதிகள் கூடிய ஆய்வகம், ஸ்கேன் வசதி, அனைத்து வசதிகள் கூடிய பிரசவ அறை, அவசர சிகிச்சை பிரிவு, அவசரப் பிரிவு, ஏ.சி. மற்றும் நான் ஏ.சி.அறைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி பொது வார்டுகள், 24மணி நேர உறைவிட மருத்துவர் கண்காணிப்பில் அவசர சிகிச்சை பிரிவு, சிறப்பாக பயிற்சி பெற்ற செவிலியர்கள், கேண்டீன் வசதிகள் ஆகியவை குறைந்த கட்டணத்தில் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இம் மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.

நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை சகோ. மோகன் சி.லாசரஸ் ஜெபித்து துவக்கி வைத்தார். மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர்அன்புராஜன் வரவேற்று பேசினார்.  புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை மெடிக்கல் சூப்பிரண்டு டாக்டர் விமல் ஜோசப், இருதய நோய் மருத்துவர் சந்திரகுமார், குழந்தைகள் நல மருத்துவர் டேனியல்ராஜ், பொது மருத்துவர் ஷெரின் ஜானகி, மகப்பேறு மருத்துவர் ஜெயசுதா  ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி சிகிச்சைகள் அளித்து இலவச மருந்துகளை வழங்கினர்.

மேலும் டாக்டர் பிரேம்குமார் தலைமையில்  அகர்வால் கண் மருத்துவ மனைகுழுவினர் இலவசமாக கண்சிகிச்சை அளித்தனர். முகாமில் நாலுமாவடியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

இலவச மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் கிளமெண்ட் எபனேசர்பால் இயேசு விடுவிக்கிறார்  ஊழிய அறங்காவலர்கள் டேவிட் பாஸ்கரன், மருதநாயகம் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News