ஏழை எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச நீட் பயிற்சி

நீட் தேர்வை படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி அளிக்கப் போவதாக தேனியை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நிறுவனம் அறிவித்துள்ளது.;

Update: 2024-04-01 11:25 GMT

நீட் தேர்வை படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி அளிக்கப் போவதாக தேனியை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நிறுவனம் அறிவித்துள்ளது.


நீட் தேர்வை படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி அளிக்கப் போவதாக தேனியை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது தேனி அருகே பொம்மையைகவுண்டன்பட்டியில் தனியார் கல்வி அறக்கட்டளை நிறுவனம் செயல்பட்டு வருகிறது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கித் தந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் 3 மாத அழகு கலை பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சியை முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி அவர்கள் சுய தொழில் தொடங்குவதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றனர் மேலும் நீட் தேர்வை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவசமாக பயிற்சி அளிக்கப் போவதாக இதன் மூலம் வறுமை நிலையில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என கல்வி அறக்கட்டளையின் அண்ணக்கொடி தலைவர் தெரிவித்தார்

Tags:    

Similar News