நத்தத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

நத்தத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-12-02 07:09 GMT

பொது மருத்துவ முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அம்மா திருமண மண்டபத்தில் BGM மருத்துவமனை மற்றும் BGM மெடிக்கல் சயின்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன், நத்தம் சிட்டி லயன் சங்கம் மற்றும் NPR நர்சிங் கல்லூரி இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமினை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினரும், நத்தம் பேரூராட்சி சேர்மன் தொடங்கி வைத்தார்.

முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, இரத்தம், சிறுநீர், இரத்த அழுத்தம், பொதுமருத்துவம், தாய்சேய் நலம், காது மூக்கு தொண்டை, கண், பல், தோல், எலும்பு மூட்டு, காசநோய், தொழுநோய் போன்றவற்றிற்கு பரிசோதனை செய்து சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.இந்த முகாமில் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

Tags:    

Similar News