இலவச கால்நடை சிகிச்சை முகாம்

இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2023-12-11 12:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா ஒனாங்குடியில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது. ஊராட் சித்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். முகாமை ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கீதா வரவேற்றார்.

டாக்டர்கள் நிமிலேசன், சின் னத்துரை, பிரபு ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் ஆடு,மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். பசுக்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல் செய்யப் பட்டது. கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தாது உப்பு பொட்டலங்கள், புல் கரணைகள் வழங்கப்பட்டன. ஊராட்சி செயலர் செல்வம் நன்றி கூறினார். கமுகவ

Tags:    

Similar News