சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்தநாள் - ஓபிஎஸ் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 255 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.;
Update: 2023-12-29 03:00 GMT
மலர் தூவி மரியாதை
அரச்சலூர் அடுத்த ஜெயராமபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 255 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொல்லானின் வாரிசு தாரர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் , இந்திய நாடு சுதந்திரம் பெற குரல் கொடுத்தவர்களில் ஒருவரான பொல்லானின் 255 வது பிறந்த நாளில் அவரின் கடமையை எண்ணி மரியாதை செலுத்தியுள்ளோம். தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக இருந்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் இந்திய நாடே அவரின் தியாகத்தை எண்ணி அஞ்சலி செலுத்த கடமை பெற்றுள்ளது. பொல்லானின் பிறந்த தினத்தை இந்திய மக்கள் கொண்டாடும் நிலை ஏற்படும்.