ஜமாத் கமிட்டி சார்பில் அரசு மருத்துவமனைக்கு பிரீசர் பாக்ஸ்

Update: 2023-12-17 06:45 GMT

பிரீசர் பாக்ஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கம்பம் அரசு மருத்துவமனைக்கு இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பில பிரிசர் பாக்ஸ் ஒப்படைக்கப்பட்டது. கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டியின் சார்பாக உத்தமபாளையம் ஆர். டி. ஓ. பால்பாண்டியன், தாசில்தார் சந்திரசேகர், ஆகியோரிடம் சென்னை புயல் மழை பாதிப்பு நிவாரணமாக, தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை மூலம் இஸ்லாமியர்களிடம், வசூலிக்கப்பட்டு நிவாரண நிதிக்கு பணம் 62 ஆயிரம் ரூபாய் ஜமாத் சார்பில் இதன் நிர்வாகிகள் ஒப்படைத்தனர். கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு இறந்த உடலை வைக்கக்கூடிய ஃப்ரீசர் பாக்ஸ் ஓன்றும் கேட்கப்பட்டது. இதனையும் கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டியின் சார்பாக, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News