கேலோ இந்தியா விழிப்புணர்வு பஸ்: போட்டியில் மாணவர்கள் கலக்கல்

கன்னியாகுமரியில் கேலோ இந்தியா விழிப்புணர்வு பஸ்சுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-01-12 08:56 GMT

கேலோ இந்தியா விழிப்புணர்வு பஸ்: போட்டியில் மாணவர்கள் கலக்கல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுக்கள் -2023,  மதிப்பு மிக்க விழாவாக தமிழ்நாட்டில் நடைபெறுவதை முன்னிட்டு  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் கேலோ இந்தியா வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு பேருந்து சுற்றுப்பயணத்தினை விளையாட்டு துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.       

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகைபுரிந்த   கேலோ இந்தியா விழிப்புணர்வு பேருந்தினை வரவேற்க்கும் விழா நடைபெற்றறு.  இவ்விழாவில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில்  350-க்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளி மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் மாரத்தான் போட்டிகள் முதலிய போட்டிகள் நடைபெற்றது.  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகள் அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தக்கலையில் வைத்து ஆண்/பெண் என இருபாலர்களுக்கும் நடத்தப்பட்டது.      

 மேலும் மாரத்தான் போட்டியானது அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.  பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.       இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார்,  உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா,  மாவட்ட  விளையாட்டு மற்றும் மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ச.ராஜேஸ், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News