கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டி: வென்றவர்களுக்கு தங்க பதக்கம்

கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டியில் வென்றவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.

Update: 2024-01-29 15:54 GMT
கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டி வென்றவர்களுக்கு தங்க பதக்கம்

கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது 20 கிலோமீட்டர் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் இன்று காலை நடைபெற்றது.

சைக்கிளிங் போட்டியில் ஆண்களுக்கு 30 கிலோமீட்டர் தூரம் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 25 பேர் பங்கேற்றனர் பெண்களுக்கான சைக்கிளிங் போட்டியில் 31 பேர் 16 கிலோமீட்டர் பயணம் நிர்ணயிக்கப்பட்டது இன்று நடைபெற்ற கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டியில் ஆண்களுக்கான போட்டியில் தங்க பதக்கம் வென்று முதலிடம் பிடித்த சன்டிகர் மாநிலத்தை சேர்ந்த ஜெய் டோக்கரா, இரண்டாம் இடம் பிடித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வெள்ளி பதக்கம் பெற்ற கேத்தாராம் சிகா மற்றும் மூன்றாம் இடம் பிடித்த டெல்லியை சேர்ந்த வெண்கல பதக்கம் வென்ற அக்ஷர் தியாகி மற்றும் பெண்கள் பிரிவில் கேரளா மாநில கல்லூரி மாணவி அவனிஸ் லில்லி கியூபிலியோ தங்க பதக்கம் வென்றார்.

இரண்டாம் இடம் பிடித்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவி சந்தோஷி ஓரான் வெள்ளி பதக்கமும், மூன்றாம் இடம் பிடித்த தமிழ் நாட்டை சேர்ந்த ஸ்ரீமதிக்கு வெண்கல பதக்கத்தை மயிலாப்பூர் எம் எல் ஏ தா வேலு வழங்கி வாழ்த்தினார்.

Tags:    

Similar News