காந்தி ஆசிரம் என் டி யு சி தொழிற்சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதம்

Update: 2023-12-20 11:47 GMT

உண்ணாவிரதம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் மூதறிஞர் ராஜாஜியால் தொடங்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த காந்தி ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த காந்தி ஆசிரமத்தின் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் காந்தியாசிரம ஊழியர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக ஊழியர்களுக்காக சங்கம் துவங்கப்பட்டு அதிலிருந்து நிர்வாகிகள் ஓய்வு பெற்று சென்ற நிலையில் புதியதாக ஐ என் டி யு சி தொழிற்சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த சங்கத்தில் சேர்ந்தவர்களை பழி வாங்கும் நோக்கில் காந்தியா சிரமத்தின் கோவை சேலம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர்,இதனை கண்டித்தும் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தங்கள் சொந்த வேலைகளுக்கு ஆசிரம பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரம செயலாளர் கண்டித்தும் இன்று காந்தியாசிரமம் முன்பு காந்தி ஆசிரம ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு INTUC மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இந்த போராட்டம் குறித்து பன்னீர்செல்வம் கூறும் போது காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்களை சங்கம் ஆரம்பித்தார்கள் என பணியிட மாற்றம் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் 10ஆம் தேதிக்குள் சம்பளம் போட வேண்டும் ஆனால் அவ்வாறு சம்பளம் வழங்குவதில்லை தமிழக அரசே ஓய்வு பெறும் வயது 60 என மாற்றியுள்ளது. ஆனால் காந்தியாஸ்ரம நிர்வாகமும் ஓய்வு பெறும் மதுரை 62 ஆக உயர்த்தியுள்ளது இதனையும் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இந்த போராட்டத்தில் காந்திய ஆசிரம ஊழியர்கள் ஐ என் டி யு சி தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News