நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் முதல் வேட்புமனு தாக்கல் நாணயமான வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் !

நாமக்கல் ,மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் என்பவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர், தாம் டெபாசிட் தொகையாக ரூபாய் 25,000 செலுத்துவதற்கு பத்து ரூபாய் நாணயங்களை ஒரு பையில் போட்டு கட்டி தோளில் சுமந்து வந்தார்.;

Update: 2024-03-20 07:31 GMT

காந்தியவாதி ரமேஷ்

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையை பத்து ரூபாய் நாணயங்களாக செலுத்தி வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் என்பவர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தூரத்தில் எல்லைக் கோடுகள் வரையப்பட்டு மாவட்ட காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இன்று காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான டாக்டர் ச. உமா வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களிடம் வேட்பு மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் தலைவர் நாமக்கல் , மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த காந்திவாதி ரமேஷ் என்பவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர், தாம் டெபாசிட் தொகையாக ரூபாய் 25,000 செலுத்துவதற்கு பத்து ரூபாய் நாணயங்களை ஒரு பையில் போட்டு கட்டி தோளில் சுமந்து வந்தார். அவர், பத்து ரூபாய் நாணயத்தை டெபாசிட் தொகை செலுத்த எடுத்து வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவற்றை முழுமையாக சோதனை செய்து அவரை உள்ளே அனுமதித்தனர். பின்னர் அவரது வேட்பு மனு மற்றும் பத்து ரூபாய் காசுகள் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தியவாதி ரமேஷ் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் டெபாசிட் தொகையை முழுவதுமாக பத்து ரூபாய் நாணயங்களை எடுத்து வந்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லதக்கது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News