ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா!
அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-24 16:53 GMT
கங்கை அம்மன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையம் கமண்டல நாக நதி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாக வெள்ளி தினமான இன்று கங்கை அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கங்கை அம்மன் மேல தாளத்துடன் ,செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.