காங்கேயம் - திருப்பூர் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்

காங்கேயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குடிநீர் குழாய் இணைப்பினால் சாலைகள் பலதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வரும் வேளையில் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-08 01:32 GMT

சாலைகள் சீரமைக்கும் பணி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-திருப்பூர் சாலையில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் சாலைகள் பரிக்கப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டது. எனவே குழாய் அமைக்கும் பணி நடைபெறுவாதல் காங்கயம்-திருப்பூர் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளதால் எதிரெதிர் திசையில் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியது. எனவே எதிரெதிர் திசையில் ஒரே பாதையில் செல்வதாலும், சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலும் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்களின் கோரிக்கையை முன்வைத்திரந்தனர்.

இதன் எதிரொலியாக போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமுள்ள  காங்கயம்-திருப்பூர் சாலையில் பறிக்கப்பட்ட குண்டும் குழியுமாக இருந்த சாலையில் காங்கிரிட் கலவைகள் ஊற்றப்பட்டு சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இது சம்பந்தப்பட்ட துறை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News