நாகர்கோவிலில் வீட்டை உடைத்து  நகை திருடியது கஞ்சா கும்பலா ?

நாகர்கோவிலில் வீட்டை உடைத்து  நகைகளை திருடியது கஞ்சா கும்பலா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-02-28 08:00 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதி சேர்ந்த ராமசாமி மனைவி குமாரி (67) என்பவர் கடந்த 17ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்றிருந்தார். நேற்று முன் தினம் குமாரியின் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, அவரது வீட்டில் இருந்த நகைகள் திருடி சென்றது தெரிய வந்ததுஇது தொடர்பான தகவலின் பேரில் கோட்டாறு போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.        

Advertisement

இதற்கிடையில் குமாரி சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்து, கோட்டர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். அந்த புகாரில் 35 ஆயிரம் பணம் மற்றும் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டதாக கூறியுள்ளார். சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு செய்தபோது ஒரு இடத்தில் கைரேகை உள்ளதாக தெரிகிறது. அதன் மூலம் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.  உள்ளூர் கஞ்சா போதை கும்பல் மூலம் இந்த கைவரிசை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News