கஞ்சா போதையில் அரிவாள் வெட்டு - பெண் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிபட்டி காளியம்மன் கோவில் தெருவில் சேர்ந்தவர் ராஜேந்திரன் ஆறுமுகத்தாய் தம்பதியின் மகள் பூமாரி 33., திருமணம் ஆகாதவர். இவரது தந்தை ராஜேந்திரன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக பூமாரி திருவண்ணாமலை ரோட்டில் உள்ள தம்பிபட்டி செல்வம் என்பவரது செங்கல் சூலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
அதே செங்கல் சூளையில் மங்காபுரம் பகுதியை சேர்ந்த திருப்பதி 28., என்பவரும் சில காலங்களுக்கு முன்பு வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூமாரியோ உடல்நிலை பாதிக்கப்பட்டு தனது கர்ப்பப்பையை இழந்து மனவேதனையில் இருந்த நிலையில் திருப்பதி,செங்கல் சூளையில் பூமாரி வேலை செய்து கொண்டு இருக்கும் போது தொடர்ந்து பூமாரியை தன்னிடம் பேச சொல்லியும் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் இதனால் சில பிரச்சினைகள் வந்ததால் திருப்பதி செங்கல் சூளையில் வேலை செய்யும் பணியில் இருந்து நின்று கோழி கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
பூமாரி வேலை முடிந்து தினந்தோறும் வீட்டிற்கு செல்லும்போதும் கடைகளுக்கு செல்லும்போதும் அவரை பின் தொடர்ந்த திருப்பதி கடந்த 14 ஆம் தேதி பூமாரியை தன்னிடம் பேச வற்புறுத்தி வந்த நிலையில் தொடர்ந்து புறக்கணித்த நிலையில் பெருமாள்பட்டி பிள்ளைமார் மேல தெருவில் பூமாரி நடந்து சென்று கொண்டிருந்தபோது திருப்பதி வழிமறித்து தாகாத வார்த்தைகளால் பேசி இத்தோடு தொலைந்து போ என்று சொல்லிக் கொண்டு கஞ்சா போதையில் அறிவாளால் சரமாரியாக வெட்டியதில் தலையிலும் இடது பக்க கண்ணம் மற்றும் காது ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே பூமாரி துடிதுடித்து மயங்கி விழுந்துள்ளார்.
தெருவில் வசிப்பவர்கள் அலறல் சத்தம் கேட்டு வந்த நிலையில் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார் திருப்பதி. பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பூமாரியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூமாரி உயிரிழந்தார்.
இந்நிலையில் பூமாரியை அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய திருப்பதியை தனிப்படைகள் அமைத்து இரவு பகலாக கடந்த 5 நாட்களுக்கு மேலாக காவல்துறையினர் தேடி வரும் நிலையில் குற்றவாளியை காவல்துறையினர் நெருங்கும் போதெல்லாம் சுதாரித்துக் கொண்டும் காவல்துறையிடம் போக்கு காட்டிக்கொண்டு திருப்பதி தலைமறைவாக ஓடி ஒளிந்து வந்த நிலையில் காவல்துறையினர் திருப்பதியின் உறவினர்கள், நண்பர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர் விசாரணையில் திருப்பதி சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிந்தவுடன் தனிப்படையினர் சென்னைக்கு சென்று திருப்பதியை பிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்தனர்.கஞ்சா போதையில் பெண்ணை சரமரியாக அரிவாளால் வெட்டிய இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.