கஞ்சா கடத்தியவர் கைது!
கூகூர் காட்டுப்பகுதியில் கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-16 08:49 GMT
கைது
உடையாளிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கூகூர் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அவர் கூகூரை சேர்ந்த செல்லையா மகன் கருப்பையா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.