ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு இரண்டு கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-18 10:30 GMT
கஞ்சா கடத்தி வந்தவர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளி புதூர் என்ற இடத்தில்,திருவலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஒருவர் சந்தேகம் படும் படியாக இருந்ததால் அவரை விசாரணை செய்த போது அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் இருந்த கஞ்சாவினை கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கஞ்சாவை கடத்தி வந்தவர் வேலூர் மாவட்டம் காட்பாடி சேவூர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தடை செய்யப்பட்ட கஞ்சாவை ஆந்திராவிலிருந்து கடத்தி வந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.