கஞ்சா கடத்தல் : 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
Update: 2023-12-21 05:20 GMT
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கோம்பை சாலையைச் சேர்ந்த அன்பு, சஞ்சய் குமார், திருவண்ணாமலை மாவட்டம் ரஞ்சித், பெரிய காஞ்சிபுரம் வெள்ளை குளம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணி இவர்கள் நான்கு பேரும் கம்பம் அருகே கம்பம் மட்டும் சாலையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்றதாக கடந்த 2022 ஆம் ஆண்டு கம்பம் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர் இவர்களிடம் இருந்து 123 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கஞ்சா கடத்தல் வழக்கில் நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.