வையாவூர் சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பு

சாலை ஓரம் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என, பல தரப்பு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-16 01:21 GMT

சாலை ஓரம் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என, பல தரப்பு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் இருந்து, அசோக் நகர் வழியாக மாமல்லன் நகர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை ஓரம், குப்பை கொட்டப்பட்டு உள்ளது. இந்த குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர் சாலை வழியாக செல்லும் பல தரப்பு வாகன ஓட்டிகள், பிளாஸ்டிக் கழிவு எரிக்கும் போது அசுத்தமான காற்றினை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது. இதை ஊரக வளர்ச்சித் துறையினர் முறையாக கண்காணிக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை காலத்தில், ஆக்சிஜன் குறைவாக இருக்கும் போது, குப்பை கழிவு எரிப்பால், மூச்சு திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலை ஓரம் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என, பல தரப்பு வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News