குப்பை குடோனில் தீ விபத்து: கரும்புகை மூட்டத்தால் மக்கள் அச்சம்

குப்பை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில், வானளாவிய கரும்புகை மூட்டத்தால் அருகில் வசித்தவர்கள் அச்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-10 10:49 GMT

தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை

அரியலூர் மாவட்டம் ஓட்டக் கோவில் கிராமத்தில் டால்மியா சிமெண்ட் நிறுவனம் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் லாரிகள் மூலம், இந்த சிமெண்ட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டு, சிமெண்ட் ஆலையில் உள்ள இயந்திரத்தில் எரிக்கப்படுவது வழக்கம். மற்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளி கிடங்கில் சேகரிக்கப்பட்டு பின்னர் எரிப்புக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இன்று மதியம் பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த திறந்தவெளி கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது .இதனால் வானளாவிய அளவில் மிகப்பெரிய கருமூட்டம் ஏற்பட்டது. ஆலையை சுற்றி பல கிலோமீட்டர் தொலைவிற்கு கரும்புகை பரவியது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் ஆலை மற்றும் அரியலூர் தீயணைப்பு துறையை சேர்ந்த இரு தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வாணலாகிய கரும் புகை மூட்டத்தால் சிமெண்ட் ஆளை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

Tags:    

Similar News