பொது இடங்களில் குப்பை - பழநி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என பழநி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Update: 2024-05-16 06:09 GMT
பழநி நகரில் ஏராளமான அளவில் திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், சத்திரங்கள், ஹோட்டல்கள் ஆகியவை உள்ளன. இவற்றில் இருந்து தினமும் ஏராளமான குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகின்றன. இதனால் நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அதற்கு பதிலாக குப்பைகளை சேமித்து நகராட்சி வாகனங்கள் வரும் போது ஒப்படைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை முறையாக பின்பற்றப்படுவதில்லை. எனவே, இனி பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.