செய்யாறு கீழ் புதுப்பாக்கம் பகுதியில் சாலையில் கொட்டப்படும் குப்பைகள்
செய்யாறு கீழ் புதுப்பாக்கம் பகுதியில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்
Update: 2024-01-31 10:49 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி கீழ் புதுப்பாக்கம், இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். செய்யாறு நகரின் விரிவாக்கம் பகுதியாக கீழ் புதுப்பாக்கம் கிராமம் உள்ளது. நாள் தோறும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையில் வீசி விட்டு சென்று விடுகின்றனர். கிராம புறங்களில் போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாத காரணத்தால் தினமும் குப்பைகள் அள்ளப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மாடுகள், ஆடுகள், நாய்கள் குப்பைகளை கிளறி சாலை முழுவதும் பரவி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது இது சம்பந்தபட்ட அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.