எலச்சிபாளையத்தில் குப்பைக்கு தீ மூட்டுவதால் கடும் அவதி

எலச்சிபாளையத்தில் குப்பைக்கு தீ மூட்டுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.;

Update: 2023-10-28 10:21 GMT

எரியும் குப்பைகள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

எலச்சிபாளையம் போலீஸ்ஸ்டேன் அருகில், ராசிபுரம்– திருச்செங்கோடு நெடுஞ்சாலையைஒட்டி பலவருடங்களாக குப்பைகிடங்கு உள்ளது. இங்குள்ள குப்பைக்கு பணியாளர்கள் அடிக்கடி தீவைத்து விடுவதால், இப்பகுதி புகைமண்டலம் போல காட்சியளிக்கின்றது. இதிலிருந்து கடும்துர்நாற்றம் வீசிவருவதால் இவ்வழியாக செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லமுடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து மறுசுழற்ச்சிக்கு அனுப்பினால் பஞ்சாயத்திற்கு வருமானம் வரும். குப்பைக்கு தீமூட்டுவதை நிறுத்த சம்மந்தபட்ட பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News