தர்மபுரியில் பூண்டு விலை தொடர் உயர்வு

தர்மபுரி நான்கு ரோடு பகுதியிலுள்ள அரசு உழவர் சந்தையில் பூண்டு விலை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Update: 2024-04-18 03:39 GMT

தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஐந்து உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதி உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய காய்கறிகள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் வெளி மாவட்டங்களான தேனீ,கொடைக்கானல், ஊட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை பயிர்களையும் இறக்குமதி செய்து உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தருமபுரி உழவர் சந்தையில் கடந்த சில வாரங்களாக பூண்டு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது நேற்று வரை ஒரு கிலோ பூண்டு 240 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கிலோவிற்கு 10 ரூபாய் உயர்ந்து கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வருகின்றது. வெளிமார்க்கெட்டுகளில் 280 ரூபாய் வரையில் பூண்டு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்

Tags:    

Similar News