வரத்து குறைவால் பூண்டு விலை ஏற்றம்

தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து குறைவால் பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2024-03-31 02:53 GMT

தருமபுரி மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஒரு சில காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே பூண்டு வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டு வரும் நிலையில் நேற்று ஒரு கிலோ பூண்டு 178 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று ஒரு கிலோ பூண்டு 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் பூண்டு விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News